கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்

வணக்கம் நண்பர்களே,இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0.1பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.


இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கி உள்ளேன். பிரித்த கோப்பினை இணைக்க அதிலயே ஒரு .exe உருவாக்கப்படும்.அதை கிளிக் செய்தால் போதும் ,மீண்டும் பிரித்த கோப்புகள் தானாகவே இணைந்து விடும் .



அதன் முகப்பு :

பிரிக்கும் முறை 1 (Normal)
பிரிக்கும் முறை 2 (Express)

பிரிக்கும் முறை 1 (Normal):
படிகள் :
படி 1 :
கோப்பினை தேர்வு செய்யுங்கள்... 

படி 2:
பிரித்த கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யுங்கள்... 
படி 3:
எவ்வளவு KB ,MB or GB என்பதனை தேர்வு செய்யுங்கள். 


 
அல்லது Predefined பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள் .

படி 4:
பிரிக்கும் வேகத்தை தேர்வு செய்யுங்கள்... 

இப்பொழுது Split பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.
2.பிரிக்கும் முறை 2 (Express) :
Express என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்... 




Read more: http://www.anbuthil.com/2012/09/blog-post_18.html#ixzz278buZUhC
Previous
Next Post »

இடுகைகளும், கருத்துரைகளும் உங்கள் கருத்துக்களை இங்க சொல்லுங்கள்
ConversionConversion EmoticonEmoticon